துரைப்பாக்கம்:பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, பெருங்குடி குப்பை கிடங்குக்கு, குப்பை லாரிகள் செல்வதை எதிர்த்தும், பெருங்குடி குப்பை கிடங்கை நிரந்தரமாக மூடக் கோரி பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாதிப்பு
துரைப்பாக்கம் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில், நேற்று காலை, 500க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் கலந்து கொண்டு, பெருங்குடி குப்பை கிடங்கை, நிரந்தரமாக மூட கோரி, மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து துரைப்பாக்கம் அனைத்து
குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி சுவாமிநாதன் கூறியதாவது:
பெருங்குடிக்கு வரும் குப்பை லாரிகள், இதற்கு முன், ராஜிவ் காந்தி
சாலையில் வந்து சீவரம் வழியாக பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பை கொட்டி வந்தன.
கடந்த ஒரு மாதமாக, மீண்டும் குப்பை லாரிகள் துரைப்பாக்கம் 200 அடி சாலை வழியாக பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பை கொட்ட துவங்கியுள்ளன.
இந்த லாரிகள் குப்பை கிடங்கின் முகப்பிலேயே குப்பையை கொட்டி விடுவதால், அந்த பகுதியில் உள்ள ஆனந்த நகர், செல்வா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ளோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சுவாச கோளாறு
மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால்,
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
குப்பை கொளுத்தப்
படும் போது, அருகில் உள்ளோருக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட
பிரச்னைகள் உருவாகின்றன.
இதனால், ரேடியல் சாலை வழியாக குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். பெருங்குடி குப்பை கிடங்கை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.