சென்னை:கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டியில், எம்.ஓ.பி., மகளிர் கல்லூரி அணி, சாம்பியன்
பட்டத்தை வென்றது.
பெங்களூரு செயின்ட் பிரான்சிஸ் கல்லூரி சார்பில், அகில இந்திய அளவில், மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான, கூடைபந்து போட்டி நடந்தது.
இதன் இறுதி போட்டியில், சென்னை எம்.ஓ.பி., கல்லூரி அணி, 42-30 என்ற புள்ளிக்கணக்கில்
பெங்களூரு ஜெயின் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.