சென்னை:சென்னையில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில், தேனாம்பேட்டை கிரிக்கெட் அகடமி அணி வெற்றி பெற்றது.
சென்னையில், கிரிக்கெட் அகடமிகளுக்கான, டி.பி.எஸ்.சி., லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், முதலில் விளையாடிய, தேனாம்பேட்டை கிரிக்கெட் அகடமி அணி, 30 ஓவரில், எட்டு
விக்கெட்டுகளை இழந்து, 216 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய, பார்ஸ் லெவன் கிரிக்கெட் அகடமி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 193 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது.