சென்னை:மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில், சென்னை மாணவர், இரண்டு தங்க பதக்கம் பெற்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், மாநில அளவிலான வாள் சண்டை போட்டி, நாமக்கலில் நடந்தது.
இந்த போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர்
பிரிவில், சென்னை பெரவள்ளூர் டான் பாஸ்கோ
பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்,
அஸ்வின் நம்பியார், அணி பிரிவிலும், தனி நபர்
பிரிவிலும், இரண்டு தங்க பதக்கங்கள் வென்றார்.