திருவான்மியூர்:திருவான்மியூரில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட, ஒன்பதாம் வகுப்பு மாணவி, சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் புனிதா, 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, புனிதா திடீரென மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக நினைத்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
திருவான்மியூர் போலீசார் விசாரணையில், புனிதா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததால், பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து, அவர் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது.
ஆனால், அந்த மாணவியிடம், அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தான் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். பின், கடத்தல்காரர்கள், தன்னை
நெல்லையில் விட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
நெல்லையில் இருந்து, நேற்று, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அந்த மாணவியிடம், போலீசார், தீவிரமாக விசாரிக்கின்றனர்.
உண்ணையிலேயே, மாணவி கடத்தப்பட்டாரா அல்லது பெற்றோருக்கு பயந்து வீட்டில் இருந்து சென்றாரா என்பது, விசாரணைக்கு பின் தெரியும்.