பூந்தமல்லி:பேருந்து தினம் கொண்டாட, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திரண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 130 பேரை, போலீசார் பிடித்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், பேருந்து தின கொண்டாட்டத்திற்காக, நேற்று காலை, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திரண்டனர். அங்கு நின்றிருந்த, தடம் எண், 53, பேருந்தை, அவர்கள், பேருந்து தின கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த நினைத்தனர்.
மாணவர்கள் கூடியிருப்பது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று, பேருந்து தினம் கொண்டாட தடை உள்ளதால், கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்கள், 130 பேரை, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.