சென்னை:கொடுங்கையூரில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் கோட்டம், வியாசர்பாடி எம்.ஆர்.நகர் மின்வாரிய அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளராக இருந்தவர் ராம்பாபு, 46. இவரது மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்தது முதலே சோகத்துடன் காணப்பட்ட ராம்பாபு, பணியிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாமல் தவித்தார். இதனால் உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர், நேற்று முன்தினம், வீட்டில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடுங்கையூர் போலீசார், அவரது அறையில் கடிதம் ஒன்று கண்டெடுத்தனர், அதில், "உடல்நிலை சரியில்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, எழுதப்பட்டு இருந்தது.