சென்னை:சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான, ஆண்டு விளையாட்டு போட்டிகள், இன்று துவங்குகின்றன.
சென்னை மாநகராட்சியில், 284 பள்ளிகள் உள்ளன. பள்ளிகளுக்கிடையே ஆண்டுதோறும், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள், பள்ளிகள் அளவிலும், மண்டல அளவிலும் நடந்து முடிந்துள்ளன.
இதில், தேர்வான மாணவர்கள் பங்கேற்கும், ஆண்டு இறுதி விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. போட்டிகளை, மேயர் சைதை துரைசாமி துவக்கி வைக்கிறார்.
பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, நாளை பரிசளிப்பு விழா நடக்க உள்ளது. ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், 370க்கும் மேற்பட்டோருக்கு, வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.