சென்னை:பெட்ரோல் நிலையம், எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்க, தடையில்லா சான்றிதழ் வழங்க, தீயணைப்பு துறையினர் லஞ்சம் கேட்பதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு புகார்கள் வந்தன.
தண்டையார் பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் ரவிக்குமார். இவர், அரும்பாக்கத்தில், வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் நிலையம் துவங்க, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறை, உதவி கோட்ட அலுவலர், சுரேஷ் ஆனந்தை, அணுகி உள்ளார்.
அவர், 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், தடையில்லா சான்றிதழ் வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார். ரவிக்குமார், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.
நேற்று, கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில், சுரேஷ் ஆனந்திடம், 30 ஆயிரம் ரூபாயை ரவிக்குமார் கொடுத்த போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர்,
அவரை கையும், களவுமாக பிடித்தனர்.