சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செம்மொழி தமிழாய்வு நிறுவன
பணியாளர்கள், மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
செம்மொழி நிறுவன சீர்கேட்டை கண்டித்தும், பணி நிரந்தரம் வலியுறுத்தியும், செம்மொழி நிறுவன பணியாளர்கள் சங்கத்தினர், கறுப்பு சட்டை அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் குறித்து, பணியாளர்கள் சங்க தலைவர், ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
நிரந்தர இயக்குனர் இல்லாத காரணத்தால், தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல், மத்திய அரசு நிதியை திரும்பி அனுப்பும் நிலை நிலவுகிறது. தமிழ் பற்றாளரை, நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும்.
பணியாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள், நிர்வாகத்தின் திட்டமிட்ட உள்நோக்கத்தின் காரணமாக, நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை எனில், பார்லிமென்ட் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.