நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆற்காடு லூத்தரன் திருச்சபை கல்வியியல் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம் நடந்தது. திருச்சபை செயலர் ஏசுடையான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் அருள்தாஸ் வரவேற்றார். பேராயர் விஜயகுமார் குடிமைப் பயிற்சி பற்றி விளக்கி பேசினார். தலைமையாசிரியர்கள் அதிசயராஜன், விமலா கிறிஸ்டி, பொருளாளர் குருநாதன், மத்திய நிர்வாகி சாமுவேல் கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர்.