கடலூர்: தை அமாவாசையை முன்னிட்டு வரும் 10ம் தேதி கடலூர் பாடலீஸ்வரருக்கு தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் ஊர்வலமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்று, அங்கு பெண்ணையாறு சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. பின்னர் சுவாமி புதுப்பாளையம் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைகிறது.