கடலூர்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு, கல்லூரி செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதன்மைச் செயல் அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதல்வர் ராமராணி முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், நேரு யுவக்கேந்திரா சண்முகம் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் ஆகியவற்றின் மூலம் எய்ட்ஸ் பற்றிய கருத்துக்களை மாணவியர்களிடம் விளக்கினர். கிராமியப் பாடல்கள் வாயிலாகவும் எய்ட்ஸ் பற்றிய கருத்துக்களை பாடி காண்பித்தனர்.