முதுநகர்: ஆந்திராவில் இருந்து கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திற்கு 4,500 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் வந்தது. ஆந்திர மாநிலம் கம்பம் ரயில் நிலையத்தில் இருந்து கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 4,500 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு ரயில் வந்தது. 58 பெட்டிகளில் வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்றி கடலூர், செம்மங்குப்பத்தில் உள்ள மத்திய உணவுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்களில் இருந்து அரிசியை இறக்கி லாரிகளில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.