திட்டக்குடி: திட்டக்குடி தாலுகாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இரண்டு வி.ஏ.ஓ., க்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. திட்டக்குடி தாலுகாவில் கொரக்கை கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றிய திருஞானசம்பந்தம், கொசப்பள்ளம் கிராமத்தில் பணியாற்றிய ஞானசேகரன் இருவரும் ஓய்வு பெற்றனர். இதனையடுத்து பணி நிறைவு பாராட்டு விழா திட்டக்குடியில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் அரங்கநாதன் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி தாசில்தார் மகாராணி, பணி நிறைவு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் வருவாய் முதன்மை உதவியாளர்கள் மோகன்ராஜ், செந்தில்குமார், சதாசிவம், வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்த், செல்வமணி, ஜெயசீலன், கவியரசு பங்கேற்றனர்.