புதுச்சேரி: "காங்கிரசுக்கு முடிவு கட்டும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உள்ளது' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில், ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில் அருகில் உள்ள பெரியார் திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., லைமை தாங்கினார். அவைத் தலைவர் பாண்டுரங்கன், எம்.எல்.ஏ.,க்கள் ஓம்சக்தி சேகர், புருஷோத்தமன், பெரியசாமி, பாஸ்கர், காரைக்கால் மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான். மத்திய அரசினால் காலம் காலமாக வஞ்சிக்கப்படும் தமிழகத்தை, காவிரி நதி நீர் பிரச்னையில் இருண்டு கிடக்கும் தமிழகத்தை, வெளிச்சத்திற்கு கொண்டு வர ஜெ., தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசும் போது, த்து நிமிடங்களுக்குள் மணி அடித்து விட்டனர். இது, ஏழு கோடி மக்களுக்கு இழைத்த அவமானம். மணி அடித்தவர்களுக்கு, சாவுமணி அடிக்கும் காலகட்டத்தில் உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் பிரதமர் ஆக இருப்பதை எப்படி ஏற்பது? கருணாநிதியின் சதிகளைக் களைந்து, மக்களுக்கு கடமையாற்றி வரும் ஜெ., இருக்க வேண்டிய இடம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அல்ல, டில்லி செங்கோட்டை. காங்கிரசுக்கு முடிவு கட்டியாக வேண்டும். அதற்கு, ஜெ., வுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது. காவிரி நீர், தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை. இப் பிரச்னைக்கு, நடுவர் மன்றம் வேண்டும் என முதல் முதலில் கூறியவர் எம்.ஜி.ஆர்., நடுவர் மன்றத்தை அமைத்தவர் வி.பி.சிங். காவிரி நதி நீர் பிரச்னைக்கு காரணமே, க ருணாநிதி தான். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, போர்க்குற்றவாளியாக, குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என, தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெ., ராஜபக்ஷேவுக்குத் தண்டனை கிடைப்பது எப்போது. ஜெ., பிரதமராகும் போது, அது நடக்கும். இவ்வாறு நாஞ்சில்சம்பத் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கரிதுண்டுக்கு கொலைக்கும் உன் வேஷம் மக்களுக்கு தெரியும். போதும் கொலைகாதே. தன்மானம் அற்றவன் நீ. திராவிட மக்களின் அவமானம் நீ . சுயநலத்துக்காக மாறி மாறி பேசும் நீ ஒரு அரசியல் காமடி பீஸ். உன் இடுப்பு வேட்டி முன்பு தி மு க கலர், அடுத்து ம தி மு க கலர், இன்று அ தி மு க கலர், நாளை எந்த கட்சி கலர் வேட்டி. ? தமிழன் என்றால் தன்மானம் உள்ளவன். ஆனால் நீ உன் மானத்தை பணத்துக்காக விற்று உள்ள நீ யார்?