E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வெள்ளை அரிசி வழங்காவிட்டால் போராட்டம் என்.ஆர். காங்., அரசுக்கு மகளிர் காங்., எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
01:34

புதுச்சேரி: "ரேஷன் கடைகளில் தரமான வெள்ளை அரிசியும், கோதுமையும் வழங்காவிட்டால், மகளிர் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி மகளிர் காங்., எச்சரித்துள்ளது. மாநில மகளிர் காங்., செயலாளர் துர்காதாஸ் விடுத்துள்ள அறிக்கை: என்.ஆர். காங்., ஆட்சியில், மக்கள் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. பெண்கள் பயன்பெறும் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. சட்டசபை தேர்தலில், இலவச வாஷிங் மெஷின், மிக்சி போன்ற திட்டங்களை ரங்கசாமி அறிவித்ததால், அக்கட்சிக்கு பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர். ஆட்சிக்கு வந்த பின், அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாமல், புறக்கணித்து வருகிறார். கடந்த காங்., ஆட்சியில், வெள்ளை அரிசி அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், 5 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டது. என்.ஆர். காங்., பொறுப்பேற்றதும், வெள்ளை அரிசி நிறுத்தப்பட்டது. இதற்காக, மக்கள் போராட்டம் நடத்தி, களைத்து விட்டனர். இந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், கடந்த சில மாதங்களாக ரேஷனில் வழங்கும் அரிசி மற்றும் கோதுமையின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. அதாவது, ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் உள்ள சிவப்பு கார்டுகளுக்கு மட்டுமே அரிசி மற்றும் கோதுமை மட்டுமே அனுப்பப்படுகிறது. இதனால், முதலில் செல்பவருக்கே மட்டும் அரிசி, கோதுமை கிடைக்கிறது. இதனால் பெண்கள் பாதித்துள்ளனர். ரேஷன் கடைகளில், அனைவருக்கும் தரமான வெள்ளை அரிசியும், கோதுமையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசை எதிர்த்து மகளிர் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.