புதுச்சேரி: திருக்கனூர் போன்நேரு மேல்நிலைப் பள்ளியின் 37ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் துரை.ஜானகிராமன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியநாராயணன் வரவேற்றார். மாணவர்களுக்கு துணை சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கி பேசினார். ஆர்த்தி, திருக்கனூர் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். புதுச்சேரி சுயநிதி கல்வி நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நடராஜன், செயலாளர் சங்கரன், பொருளாளர் சந்தானம் வாழ்த்தி பேசினர். திலீபன் அக்குவாஸ் உரிமையாளர் துரைராஜன், சகாபுதீன், பாலாஜி அரிசி ஆலை உரிமையாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் லட்சுமி காந்தன், இரண்டாமிடம் பிடித்த மாணவி தரணிபிரதாப்,3ம் இடம் பிடித்த ரஞ்சிதாவிற்கு பரிசளிக்கப்பட்டது. தமிழ் பாடத்தில் தலா 196 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த பள்ளி மாணவிகள் புகழ்மதி, ரபினாபேகத்திற்கு ரொக்கப் பரிசு மற்றும் இயர்புக் மற்றும் சான்றிதழும், எஸ்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பிடித்த மோனிஷாவிற்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விரிவுரையாளர் பசுபதி நன்றி கூறினார்.