புதுச்சேரி: சொசியெத்தே புரகிரஸ்தே பள்ளியில் சமுதாய நலப்பணித்திட்டத்தின் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியில் நடந்த விழாவிற்கு, தாளாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரகுநாதன் வரவேற்றார்.நுகர்வோர் பிரச்னைகள், அதை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து கள விளம்பரத்துறை அதிகாரி முனைவர் சிவக்குமார், திருச்சி அதிகாரி ரவீந்திரன் விளக்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர். திட்ட அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.