புதுச்சேரி: குயவர்பாளையம் லெனின் வீதியில், கேபிள் "டிவி' ஒயர் புதைப்பதற்காக, அனுமதியின்றி நள்ளிரவில் சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம், எம்.எல்.ஏ., எதிர்ப்பால் உடனடியாக மூடப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதி, குயவர்பாளையம் லெனின் வீதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் ராட்சத இயந்திர உதவியுடன் சாலையை ஆழமாகத் தோண்டியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர். அவர் , சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரித்ததில், அரசுப் பணிக்காக இல்லாமல், தனியார் கேபிள் "டிவி" ஒளிபரப்புக்கான கேபிள் புதைப்பதற்காக, அனுமதியின்றி பள்ளம் தோண்டப்படுவது தெரிந்தது. பள்ளம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியை உடனடியாக நிறுத்துமாறு கூறினார். உருளையன்பேட்டை போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளம் உடனடியாக மூடப்பட்டது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.