ஊராட்சியில் நிதி முறைகேடு புகார் ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
05:14

மதுரை: திருச்சி அருகே பேரகம்பி ஊராட்சியில், தேர்தல் விதிகளை மீறி 40 லட்சம் ரூபாய்க்கு வளர்சிப்பணிகள் நடந்ததாக தாக்கலான வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பேரகம்பி சீனிவாசன் தாக்கல் செய்த மனு: மணச்சநல்லூர் பேரகம்பி ஊராட்சியில் 120 ஏக்கரில், முள்மரங்களை வெட்ட 2011 ஜூலை 1 ல் 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. ஊராட்சி விதிகளின்படி முறையாக நடக்கவில்லை. அத்தொகையை 90 நாட்களில், வளர்ச்சிப்பணிக்கு செலவிட்டதாக கணக்கு எழுதியுள்ளனர். ஊராட்சி தேர்தல் நடத்த 2011 செப்.,21 ல் அறிவிப்பு வெளியானது.
அறிவிப்பு வெளியான பின்னும், விதிமீறி வளர்ச்சிப் பணி நடந்துள்ளது. கடந்த முறை தலைவராக இருந்தவரே, மீண்டும் வெற்றிபெற்றார். நான் 2012 ஜன.,19 ல் கலெக்டரிடம் மனு அளித்தேன். ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை கலெக்டர் ரத்து செய்தார்.வளர்ச்சிப் பணிக்குரிய ஆவணங்கள் கோரி பி.டி.ஓ.,விடம் விண்ணப்பித்தேன். அவர்,"தகவல் உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 3216 பக்க ஆவணங்கள் உள்ளன. தகவல் கட்டணம் 16 ஆயிரத்து 80 ரூபாய்க்கு "டிமாண்ட் டிராப்ட்' அளிக்க வேண்டும்,' என்றார். நான் "டிமாண்ட் டிராப்ட்' அளித்தேன். "உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை,' எனக்கூறி ஊராட்சி உதவி இயக்குனர், 33 நாட்களுக்கு பின் "டிமாண்ட் டிராப்டை' திருப்பி அனுப்பினார்.நான், அத்தொகையை ஊராட்சி வங்கி கணக்கில் செலுத்தினேன். எனக்கு 2728 பக்க ஆவணங்களை அளித்தனர். அதில் 1700 பக்கங்களில் எந்த தகவலும் இல்லை. 268 பக்கங்களில், சம்பந்தமில்லாத ஆவணங்களை இணைத்திருந்தனர்.கலெக்டரிடம் 2012 நவ.,19 ல் மனு அளித்தேன். நிதி முறைகேடு புகாரை விசாரித்து, ஊராட்சியை கலைக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். திருச்சி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்., 11 க்கு தள்ளிவைத்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.