மதுரை: மதுரை மாநகராட்சியில், மூன்று நாட்களாக நிறுத்தப்பட்ட குடிநீர் வினியோகம், நேற்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.வைகை அணையிலிருந்து, மாநகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் இணைப்பில், பல இடங்களில் கசிவு ஏற்பட்டது. குடிநீர் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த அவற்றை சரிசெய்யும் பணி, பிப்., 4, 5 ல் நடந்தது. ஏ.வாடிப்பட்டி, புதூர், பூவம்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கச்சி
ராயிருப்பு, மண்ணாடிமங்கலம் வெளிப்பாதையில் உள்ள குழாய்களின் கசிவு சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் தொடங்கியது. மண்டலம் 1ல், கோச்சடை, எச்.எம்.எஸ்., காலனி, விராட்டிபத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், அரசரடி, கரிமேடு, புட்டுத்தோப்பு, எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ்நகர் பகுதியிலும், மண்டலம் 2ல், அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், அகிம்சாபுரம், கோரிப்பாளையம், ராஜாஜி பூங்கா, கே.கே.நகர், அண்ணாநகர், புதூர், வண்டிப்பாதை, கிருஷ்ணாபுரம் காலனி, பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகள், மண்டலம் 3ல், நெல்பேட்டை, கீழவாசல், மைனா தோப்பு, மகால், பழைய குயவர் பாளையம், தெப்பக்குளம், அனுப்பானடி பகுதிகள், மண்டலம் 4ல், திடீர் நகர், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஜான்சி ராணி பூங்கா, எம்.கே.புரம், ஜெய்ஹிந்த்புரம், சுந்தராஜபுரம், டி.வி.எஸ்.,நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், மாடக்குளம், பைகாரா பகுதிகளில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், மூன்று நாட்களாக குடிநீரின்றி மக்கள் தத்தளித்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. இனியாவது சீரான குடிநீர் கிடைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.