திருப்பரங்குன்றம்: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில், மின்னணுவியலின் நவீனம், 3ஜி, 4ஜி தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் நேரு தலைமை வகித்தார். பேராசிரியர்கள் காஞ்சனா, சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜா கோவிந்தசாமி வரவேற்றார். தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியை சுகுனேஷ், சவுராஷ்டிரா கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர். துறைத் தலைவர் பொன்மலர் நன்றி கூறினார்.