கள்ளிக்குடி: டி.குண்ணத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி,50. இவர் நேற்று முன்தினம் கள்ளிக்குடி அருகே உள்ள சோளம்பட்டி யில் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்தார். மாலை 6மணியளவில் கள்ளிக்குடி சத்திரம் பஸ் நிலையம் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது லாரி மோதியது. படு காயமடைந்த இவர் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
கள்ளிக்குடி அருகே உள்ள எஸ்.பி.,நத்தத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். நேற்று மாலை ஏழு மணியளவில் சிவரகோட்டையில் ரோட்டை கடக்க முயன்ற போது. இண்டிகா கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இரண்டு விபத்துகள் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.