மதுரை: "ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருக்கும், ஓய்வூதியம் வேண்டுவோரின் மனுக்களுக்கு விடிவு பிறக்க வேண்டும்,' என, கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தனக்கன்குளம் கிளை நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. கிளை தலைவர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சிவமாலை, பொருளாளர் சக்திவேல், துணை தலைவர்கள் முனியாண்டி, ரவி பேசினர். கூட்டத்தில், கோடையில் குடிநீர், மின் தட்டுப்பாட்டை மாநகராட்சி தடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுரங்க பாதை, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும், எளிதில் கிடைக்காத ஆவணங்களுக்கு அலைகழிக்கும் தொழிலாளர் நலவாரியத்தின் செயல் தவிர்க்கப்பட வேண்டும், நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய மனுக்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.