சென்னை:"எருக்கஞ்சேரி கழிவுநீரேற்று நிலையத்தில், நீர் மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி நடப்பதால், தொடர்புடைய, 12 கழிவுநீரேற்று நிலையங்கள், ஒரு நாள் செயல்படாது' என, சென்னை கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வாரிய மேலாண் இயக்குனர் சந்தரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை எருக்கஞ்சேரி கழிவுநீரேற்று நிலையத்தில், நீர் மூழ்கி மின் மோட்டார் பொருத்தும் பணி, இன்று இரவு நடக்கிறது.
இதன் காரணமாக, மேம்பட்டை, வியாசர்பாடி ஏரி, எம்.கே.பி.நகர், தாமோதாரன் நகர், பெரம்பூர், ஏகாங்கிபுரம், செம்பியம், பெரியார் நகர், ஜவகர் நகர், திம்மசாமி தர்கா, புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் கழிவுநீரேற்று நிலையங்களின் செயல்பாடுகள், இன்று இரவு, 10:00 மணி முதல், நாளை இரவு, 10:00 மணி வரை நிறுத்தி வைக்கப்படும்.
மோட்டார் பொருத்தும் போது, ஆள்நுழைவு வாயில்களில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரை, லாரிகள் மூலம் தற்காலிகமாக அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கழிவுநீர் பிரச்னை ஏற்பட்டால், பகுதி பொறியாளர்களை, 81449 30904 (பகுதி-4), 81449 30906 (பகுதி-6), 81449 30908 (பகுதி -8) என்ற, அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.