சென்னை:சிங்கார வேலர் மாளிகையில், பாதுகாப்பு பணியாற்றும் பெண் போலீசாருக்கு போதிய பாதுகாப்பில்லை என, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, அவர்கள் தங்கும் இடத்திற்கு, தற்காலிக பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் செயல்படும் ராஜாஜி சாலையில் உள்ள சிங்கார வேலர் மாளிகையில், 13 பெண் போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில், 2வது தளத்தில் உள்ள பெண் போலீசாருக்கு தங்கும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை என, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன், செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தை, உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, தற்காலிகமாக, தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் மேற்கொண்டு, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பையால், மறைவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், நிரந்தர தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என, கூறியுள்ளனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.