வண்டலூர்:வண்டலூர் உயிரியல் பூங்கா காட்டு மாடு, ஆண் கன்று ஒன்றை ஈன்றது.வண்டலூர் உயிரியல் பூங்காவில், லட்சுமி என்ற, ஆறு வயது, பெண் காட்டு மாடு, கடந்த, 19ம் தேதி, ஆண் கன்று ஈன்றது.இந்த கன்றுடன் சேர்ந்து வண்டலூர் பூங்காவில் உள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.தாய் கன்றுக்கு தேங்காய், கடலை புண்ணாக்கு, கொண்டைக்கடலை, வாழைப்பழம், கீரை ஆகியவை, சிறப்பு உணவாக வழங்கப்படுகின்றன.