வில்லிவாக்கம்:தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் தயாநிதி, 59; இவரது மகன், சிவக்குமார், 21. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் பிரிவில், இறுதியாண்டு படித்து வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சிவக்குமார், கடந்த ஓராண்டாக, வில்லிவாக்கம், பெருமாள் கோவில் தெற்கு மாடவீதியில் உள்ள, அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் அறை எடுத்து, நண்பர்கள் ஐந்து பேருடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அறையில் தூங்கி கொண்டிருந்த சிவக்குமார், இரவு, 11:30 மணிக்கு, கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து, கீழே குதித்துள்ளார்.இதில், பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பின், மேல்சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து, வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.