புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில், நீர் ஆவியாகி, நீர்மட்டம் குறைவதால், அதை பூர்த்தி செய்ய பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில், நீர்மட்டம் நாளுக்கு நாள், குறைந்து வருகிறது.
குறைந்து வரும் நீர்மட்டத்தின் அளவை சரிசெய்ய, பூண்டி ஏரியிலிருந்து, செங்குன்றம் ஏரிக்கும், சோழவரம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும், வினாடிக்கு, 300 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், "நீர், ஆவியாகி நீர் மட்டம் குறைவதை பூர்த்தி செய்ய, ஒவ்வொரு ஆண்டும், நீர் அனுப்புவது, வழக்கம். தற்போது, பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புகிறோம். என்றனர்.
- நமது நிருபர் -