சென்னை: விபத்தில் இறந்த வாடிக்கையாளருக்கான காப்பீடு தொகையை வழங்க மறுத்ததால், பாதிக்கப்பட்ட அவரின் மனைவிக்கு, உரிய நஷ்டஈடு வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை,
பெரம்பூரைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர், "சிட்டி பாங்க்'கில், "கிரெடிட் கார்டு' வாடிக்கையாளராக இருந்தார். இவர், 2002 ஜனவரியில், விபத்தில் சிக்கி இறந்தார். "கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இறக்க
நேர்ந்தால், அவரின் வாரிசுக்கு (நாமினி), 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.இத்தொகையை பெற, நந்தகோபாலின் மனைவி நிர்மலா, வங்கி நிர்வாகத்தை அணுகி
னார். அவர்கள், "நியூ இந்தியா அசூரன்ஸ்' நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர். காப்பீட்டு நிறுவன நிர்வாகம், "நந்தகோபால் வைத்திருந்த கிரெடிட் கார்டிற்கு, விபத்தால் ஏற்படும் இறப்புக்கு இழப்பீடு
பெற முடியாது' என, நிர்மலாவிடம் தெரிவித்தது.இது தொடர்பாக, ஐகோர்ட்டில், நிர்மலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை, அமைந்தகரை மற்றும் அண்ணா சாலை
யில் உள்ள, சிட்டி பாங்க் நிர்வாகம்; அண்ணா சாலை, நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த, சென்னை (வடக்கு)
நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சம்பந்தப்பட்ட வங்கியின் பிரதிநிதி, மனுதாரரின் கணவரை, வாடிக்கையாளராக சேர்க்கும் போது, அனைத்து, "கிரெ
டிட் கார்டு' வாடிக்கையாளர் கணக்கிற்கும், விபத்து காப்பீடு வழங்கப்படும் என, தெரிவித்துள்ளார். சொன்ன படி இழப்பீடு தராமல், மனுதாரரை அலைக்கழித்து உள்ளனர்.இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈ
டும், வழக்கு செலவாக, 5,000 ரூபாய் தர வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன நிர்வாகங்கள், 2 லட்சம் ரூபாய், விபத்து காப்பீடு தொகையை, 2002 ஏப்ரலில் இருந்து, வட்டியு
டன் சேர்த்து வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.