சென்னை:சென்னையில் நடந்த, போக்குவரத்து கழக ஊழியர் கபடி போட்டியில், திருப்பூர் மண்டல அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில், 2வது ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட, 21 மண்டல போக்குவரத்து கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி நாள் போட்டி அன்று, திருப்பூர் அணி, 17-25 என்ற புள்ளிக்கணக்கில், கோவை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், மதுரை அணியை, புதுக்கோட்டை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.இதில், முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக, 7.22 கிராம், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு, 4.44 கிராம், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு, 2.77 கிராம் தங்கம் என, ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்ற, ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.