சென்னை:எர்ணாவூரில், ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது.
மணலி நீரேற்று நிலையத்தில் இருந்து, எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு, எண்ணூர்- கத்திவாக்கம் நெடுஞ்சாலை வழியாக, ராட்சத குடிநீர் குழாய் செல்கிறது.
கனரக வாகனங்கள் அதிர்வால், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், எர்ணாவூர் முருகன் கோவில் பேருந்து நிறுத்தத்தில், ராட்சத குடிநீர் குழாயில், சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது.
அதிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறி, சாலையில் ஓடுகிறது. குடிநீர் செல்லும் வேகம் குறைந்ததும், மழைநீர் மற்றும் கழிவுநீர், ராட்சத குடிநீர் குழாயில் செல்கிறது.
இதனால், குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீரை குடிக்கும் பொதுமக்கள், சுகாதார பாதிப்பிற்கு ஆளாகும் நிலை உள்ளது. குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.