பாராளுமன்ற தேர்தலுக்கு கூடுதல் ஓட்டுச்சாவடி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 பிப்
2013
02:08
பதிவு செய்த நாள்
பிப் 18,2013 21:42

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், பாராளுமன்ற தேர்தலுக்கு புதிதாக ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், ஒன்பது லட்சத்து 10 ஆயிரத்து 42 ஆண்கள்; எட்டு லட்சத்து 83 ஆயிரத்து 319 பெண்கள்; 49 திருநங்கைகள் என 17 லட்சத்து 93 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். ஜன., 10ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 51 ஆயிரத்து 895 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்தாண்டு நிலவரப்படி, எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 652 ஆண்கள்; எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 841 பெண்கள்; 22 திருநங்கைகள் என 17 லட்சத்து 41 ஆயிரத்து 515 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின், புதிய வாக்காளர்கள் சேர்க்க, மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, 22 ஆயிரத்து 390 ஆண்கள்; 29 ஆயிரத்து 478 பெண்கள்; திருநங்கைள் 27 பேர் என 51 ஆயிரத்து 895 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அதனால், வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளை மாற்றி அமைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் தாலுகாவில் 261 ஓட்டுச்சாவடிகள்; காங்கயம் 233; அவிநாசி 251; திருப்பூர் வடக்கு 271; திருப்பூர் தெற்கு 206; பல்லடம் 293; உடுமலை 244; மடத்துக்குளம் 220 என மொத்தம் 1,979 ஓட்டுச்சாடிகள் உள்ளன.திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் 9,000க்கும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, நகர்ப்பகுதிகளில் 1,200 நபர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, புறநகர் பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது,"மாவட்டம் முழுவதும் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் எண்ணிக்கை, இரு சாவடிகளுக்கு இடையே உள்ள தொலைவு குறித்து ஆய்வு செய்து புதிய சாவடி அமைக்கப்படும். இதுதொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்படும்,' என்றனர்.


 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sehu - chennai,இந்தியா
22-பிப்-201301:13:20 IST Report Abuse
Sehu ://www.elections.tn.gov.in/searchid.htm <<< இங்கே திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்த்து கொள்ளுங்கள். பல ஊர்களுக்கு சரியாக இல்லை என தெரிகிறது. உதாரணம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாகம் எண் 72. உள்ளே உள்ள PDF file வேறு பகுதிக்கு உள்ளது. அந்த ஊர்களின் PIN Code ம் தவறாக உள்ளது. இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் பெரும்பாலான பாகங்கள் தவறாகவே உள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.