திருப்பூர்: பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, தனித்துணை கலெக்டர் கோபென்ட் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.முத்தூர் பேரூராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில்,"ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பொட்டுசாமி கோவில் வீதியில் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள ஆழ்குழாய் வற்றிவிட்டதால், குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கொடுமுடி ரோட்டில் 1.5 கி.மீ., தூரத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது.
தொலைவில் உள்ள போர்வெல் தண்ணீரை கொண்டுவர, மோட்டார் வசதி செய்துகொடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.கேத்தனூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில், ஊராட்சி தலைவர் ஹரிகோபால் கொடுத்த மனுவில், "பீரங்கிமேடு பகுதியில் உள்ள கல்குத்து புறம்போக்கு நிலம் வீணாக கிடக்கிறது. நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்து, ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் வீட்டு வசதி பெறுவார்கள்,' என்று தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் முன்னேற்ற சங்கம் சார்பில், தலைவர் சந்திரா, செயலாளர் சுஷ்மிதா, பொருளாளர் பத்மா மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.