சென்னை:இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியிடம் இருந்து, 10 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூர், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 40; இவரது மனைவி ஜெயந்தி, 35. உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக, நேற்று, திருவொற்றியூர் சென்ற இவர்கள், பிற்பகல், 2:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஜெயந்தியின் கழுத்தில் இருந்த, 10 சவரன் நகையை பறித்தனர். நகை பறித்ததை உணர்ந்த ஜெயந்தி சத்தம் போட்டதால், இருசக்கர வாகனத்துடன் கணவன், மனைவி கீழே விழுந்தனர். இதில், இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஐ.ஓ.சி., பேருந்து நிலையத்தை நோக்கி தப்பினர். இதுகுறித்து, பாஸ்கரன் கொடுத்த புகாரை அடுத்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.