என்.ஆர். காங்., மாநாட்டில் மக்கள் வெள்ளம் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
02:00

புதுச்சேரி:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசை வலியுறுத்தி, என்.ஆர். காங்., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய என்.ஆர். காங்., கட்சியின், 2வது அரசியல் எழுச்சி மாநாடு, ஏ.எப்.டி., திடலில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டை முன்னிட்டு, அனைத்து இடங்களிலும் பேனர், கட் அவுட்கள் வைத்து, அலங்கார வளைவுகள், கொடிகள் தோரணங்களுடன் நகரம் விழாக்கோலம் பூண்டி
ருந்தது.
மக்கள் வெள்ளம்
மாநாடு நடக்கும் ஏ.எப்.டி., திடலில் மாலை 3 மணியில் இருந்தே, தொண்டர்கள், நிர்வாகிகளும் வரத் துவங்கினர். இதனால், நகரத்தின் பல சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அனைத்து தொகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் குவிந்தனர். மக்கள் கூட்டத்தால் ஏ.எப்.டி., திடல் நிரம்பி வழிந்து, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் ஆரம்பித்து, முதலியார் பேட்டை வரை, எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியளித்தது. இதனால், கடலூர் சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
அதிரடி தீர்மானம்
மாநாட்டில், "மாநில அந்தஸ்து' தொடர்பாக ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மான விபரம் வருமாறு:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருந்தபோதும், முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இல்லை. மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் ஒரு தனித் துறைபோல, புதுச்சேரி அரசு செயல்படுகிறது. சட்டங்களை உருவாக்குவதற்குகூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உரிமை கிடையாது.
புதுச்சேரியின் பட்ஜெட்கூட, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு சமர்ப்பிக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில், அவற்றை பட்ஜெட்டில் சேர்க்க கூட உரிமையில்லை. இதையும், உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர்.
வளர்ச்சிக்கு சிக்கல்
நிர்வாக தலைவராக கவர்னர் இருப்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அவருக்கு விசுவாசமாக நடக்கிறார்களே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்களுக்காக பணியாற்ற வில்லை.
மாநிலத்தில் எந்த அதிகாரிக்கு எந்தத் துறையை ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டியது முதல்வர் தான். ஆனால், புதுச்சேரியில், அந்த அதிகாரத்தையும் டில்லியில் உள்ள அதிகார வர்க்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை உருவாக முடியாததால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.
நிதி நெருக்கடி ஏன்
ஆரம்ப காலக்கட்டத்தில், தாராளமான நிதி ஆதாரத்தை அளித்து வந்த மத்திய அரசு, 1991ம் ஆண்டிற்கு பின், புதுச்சேரிக்கு வழங்கி வந்த நிதியைக் குறைத்துவிட்டு, இன்றைக்குப் புதுச்சேரியை நிதிச் சிக்கலில் தள்ளி விட்டிருக்கிறது. ஒத்துக்கொண்ட நிதியை ஏதாவது காரணம்காட்டி மறுக்கிறது.
இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவு கொடுத்து, கடைசியில் அதை 300 கோடியாக குறைத்துவிட்டது.இப்படி எதேச்சதிகாரமாக எடுத்த முடிவுகளால் புதுச்சேரி அரசுக்கு வரலாறு காணாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசு, தனது அனைத்து உரிமைகளையும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாரை வார்த்துவிட்டு இருப்பது ஜனநாயக முரண்பாடாகும். சட்டசபை இருக்கும் இடத்தில், மாநில அரசு மட்டுமே இயங்க முடியும்.
ஜனநாயகம் மலரும்
முழு மாநில தகுதி கிடைக்கும்போது, புதுச்சேரிக்கு இதுவரை கிடைக்காத மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எல்லா முடிவுகளும் புதுச்சேரியில் எடுப்பதால், டில்லிக்குச் சென்று முடிவெடுக்கும் கால தாமதம் குறையும். அடித்தட்டு ஜனநாயகம் மலருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
திட்டங்களை உருவாக்க, புதுச்சேரிக்கென தனி திட்டக்குழு உருவாக்கி, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை விரைவுப்படுத்த முடியும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தங்கு தடையின்றி முடிவு எடுக்கலாம்.
தனி தேர்வாணையம் உருவாக்கப்பட்டு, எல்லா பணியிடங்களும் தாமதமின்றி உள்ளூர் மக்களுக்கே கிடைக்க செய்யலாம். 13வது நிதிக் குழு பரிந்துரைபடி, மத்திய அரசின் மொத்த வருவாயை மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும் அடிப்படிடையில், 2013-14ம் ஆண்டு, 640 கோடி ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் வெளியில் கடன் வாங்காமலேயே, திட்டத்திற்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே மாநில அந்தஸ்து பெறுவது எல்லா வகையிலும் உகந்தது. உள்துறை அமைச்சக நிலைக் குழுவே, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, பார்லிமெண்ட்டில் தெரிவித்த பிறகு, காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.
வரும் பார்லிமெண்ட்டின் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, என்.ஆர்.காங்., வலியுறுத்துகிறது என, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.