வேலை நிறுத்தம்; கடையடைப்பால் சகஜ வாழ்க்கை பாதிப்பில்லை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
03:25

விலைவாசி உயர்வை கண்டிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் பொது வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. பெரும்பாலான கடைகள்
அடைக்கப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. வங்கிகள் மூடப்பட்டிருந்ததால், பண பரிவர்த்தனை முடங்கியது. அரசு மற்றும் தனியார் பஸ்களும், ஆட்டோக்களும் ஓடியதால், பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.மத்திய அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக் கொள்ள வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது
என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.வேலை நிறுத்த போராட்டத்தோடு,
கடையடைப்பு போராட்டமும், திருப்பூரில் நடந்தது. மளிகை, காய்கறி, வீட்டு உபயோக பொருட்கள், பேக்கரி, ஓட்டல்கள், துணி, நகைக்கடைகள் என அனைத்து வகையான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், தினமும் 300 டன் காய்கறி விற்பனை நடக்கும். மற்ற பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து குறைந்ததோடு, வியாபாரிகள் வருகையும் குறைந்து காணப்பட்டது. உள்ளூர் விவசாயிகள் வருகையும் குறைந்திருந்தது.

இதனால், தென்னம்பாளையம் மார்க்கெட்டில், வர்த்தகம் 50 சதவீதம் பாதித்தது.நகரிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால், 90 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதித்தது. கடையடைப்பு மற்றும் கம்பெனிகளும் மூடப்பட்டிருந்ததால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும், மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட், நகரின் பிரதான ரோடுகள், கடை வீதிகளில் மக்கள்
நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.லாரி உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்ற தால், மாவட்டத்தில் 12 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால், திருப்பூரில் இருந்து வெளியூர்கள் மற்றும் ஏற்றுமதிக்கு செல்லும் ஆயத்த ஆடைகள், அரிசி, எண்ணெய், மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தேக்கமடைந்தன. ரயில்களிலும் சரக்குஇறக்கப்படாததால், திருப்பூர் ரயில்வே "கூட் ஷெட்' லாரிகள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. சரக்கு போக்குவரத்து முழுமையாக பாதித்ததால், 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதித்தது.அதேநேரத்தில், பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அதனால், வாகன போக்குவரத்தில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. சினிமா தியேட்டர்கள் இயங்கின; கூட்டம் அதிகளவு காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் சிறிய கடைகள் திறந்திருந்தன. ரோட்டோரங்களில், தற்காலிகமாக டீக்கடைகள், உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, விற்பனை அமோகமாக நடந்தது. அதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.அரசு அலுவலகங்கள் "வெறிச்'
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகா அலுவலகங்கள், மூன்று ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்
பட்டன. வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று வழக்கம்போல் பணியாற்றினர்.

புதிதாக பணியில் நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்கமும், அரசு ஊழியர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த 40 சதவீதம் பேர், போராட்டத்தில் பங்கேற்றதால், கலெக்டர் அலுவலக வளாகம் விடுமுறை நாள் போல் காணப்பட்டது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் சைபுதீன் மற்றும் செயலாளர் விஜயனிடம் கேட்டபோது,"வருவாய்த்துறையில் 845 பேர் உள்ளனர். அவர்களில், கிராம நிர்வாக அலவலர்கள், கிராம உதவியாளர்கள் என 521 பேர் நேற்று பணியில் ஈடுபட்டனர். மீதியுள்ள 324 ஊழியர்களில் 23 பேர் மட்டும் பணிக்கு சென்றுள்ளனர்; மற்றவர்கள் போராட் டத்தில் பங்கேற்றுள்ளனர்,' என்றனர்.அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட
தலைவர் சென்னியப்பனிடம் கேட்டபோது,""மாவட்டம் முழுவதும், சங்கத்தில் 160 இணைப்பு சங்கங்கள் உள்ளன; அவற்றில் 2,250 பணியாளர்கள் உள்ளனர். எங்களது சங்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை,'' என்றார்.திருப்பூர் எல்.ஐ.சி., அலுவலகத்தில் வழக்கமாக 70 பேர் பணியாற்றுவர். நேற்று, ஒன்பது அதிகாரிகள், 15 ஊழியர்கள் மட்டும் வேலை செய்தனர்; மீதமுள்ளவர்கள் வேலைக்கு வரவில்லை. பாலிசிதாரர்கள் பலர் பணம் செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர்.ஆர்.எம்.எஸ்., தபால் அலுவலகத்தில் மூன்று அதிகாரிகள் உட்பட 48 பேர் வேலை செய்கின்றனர். இதில், நான்கு பேர் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர்; வழக்கம்போல், ஸ்பீடு போஸ்ட், பதிவு தபால் மற்றும் தபால் விற்பனை பணிகள் நடந்தன. திருப்பூர் அஞ்சலக கோட்டத்தில் தலைமை அஞ்சலகம், கிளை அஞ்சலகம், உதவி அஞ்சலகம் என 413 அலுவலகங்கள் உள்ளன; 1,154 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 113 அஞ்சலகங்கள் மட்டும் திறந்திருந்தன. மீதமுள்ள அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தபால் பட்டுவாடாவில் பாதிப்பு இல்லை. திறந்திருந்த அலுவலகங்களில் பண பட்டுவாடா, தபால் கார்டு விற்பனை, பதிவு தபால் செய்தல் ஆகிய பணிகள், வழக்கம்போல் நடந்தன. அலுவலக பணிகள் மட்டும் பாதிக்கப்பட்டன.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபட்டனர். உடனடி டிக்கெட் கவுன்டர், கூடுதலாக திறக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்பட்டது.
வங்கி சேவை பாதிப்புஅனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டுக்குழு தலைவர் மனோகரனிடம் கேட்ட போது, ""திருப்பூர், காங்கயம், பல்லடம், அவிநாசியில் வங்கி பணிகள் முடங்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்படவில்லை. 3,000 பேர் பணிகளுக்கு செல்லவில்லை. இன்றிரவு (நேற்று) வரை, ஒப்பந்த ஊழியர்
களுக்கு தேவையான பணத்தை, வங்கிகளில் இருந்து தர வாய்ப்பில்லை. இதனால், ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாத சூழல் உருவாகலாம்,'' என்றார்.
போராட்டத்தில், திருப்பூரில் பி.எஸ். என்.எல்., ஊழியர்கள், அதிகாரிகள் என 400 பேர் பங்கேற்றனர். அதனால், தொலைத்தொடர்பு சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
கல்லூரிக்கு விடுமுறைதிருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் சங்கமும் பங்கேற்றது; 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
கல்லூரிக்கு குறைந்த அளவு மாணவர்களே வந்திருந்தனர். பேராசிரியர் வருகையும் குறைந்திருந்ததால், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

கல்லூரி முதல்வர் மனோகரனிடம் கேட்ட போது,""பேராசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், பலர் வரவில்லை. மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் கல்லூரிக்கு விடுமுறை விட்டுள்ளோம்,'' என்றார்.பாத்திரம் உற்பத்தி பாதிப்புதிருப்பூரை அடுத்துள்ள 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாத்திரம் உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படும். இத்தொழிலை நம்பி, 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். நேற்று, அனைத்து பாத்திர உற்பத்தி பட்டறைகளும் மூடப்பட்டு இருந்தன. அதனால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எவர்சில்வர், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு என மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது.போலீஸ் பாதுகாப்புதிருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து சப்-
டிவிஷன்களிலும், டி.எஸ்.பி.,க்கள் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கமாக உள்ள பீட்களை காட்டிலும், கூடுதல் பீட்களில் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் தவிர, கோவை சிறப்பு காவல் படையில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், ஒரு கம்பெனி போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.