மாதவரம்:தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய தாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதானந்தம், 57. இவர் தனக்கு வேண்டியவர்களுக்கு, மாதவரம் தாலுகா அலுவலகத்தில் வருமானச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். பின், தாசில்தார் வரதராவை சந்தித்து, தான் விண்ணப்பித்த மனுவுக்கு வருமானச்சான்றிதழை உடனே, அளிக்க வேண்டும் என்று கேட்டார்.
மனுதாரர் குறித்து, உரிய விசாரணைக்குப் பின் தான் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கூறினார். ஆத்திரமடைந்த சதானந்தம், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரை அடுத்து போலீசார், சதானந்தத்தை கைது செய்தனர்.