சென்னை:மத்திய தொழிற் சங்கங்களின் இரண்டாம் நாள் வேலை நிறுத்தத்தால், வங்கி, காப்பீடு, ஆவடி டாங்கி தொழிற்சாலை மற்றும் டி.வி.எஸ்., குழுமம், அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுஇருந்தன.
இவற்றில் பணியாற்றும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரண்டாம் நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். ஆனால், பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் போக்குவரத்து
எவ்வித பாதிப்புமின்றி இயங்கின.