சென்னை:புதிய தலைமை செயலகத்தை,
மருத்துவமனையாக்கும் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, கீழ்தளத்திலிருந்து, அனைத்து கீழ்தளங்களையும் இணைக்கும் சாய்தளம், அமைக்கப்பட்டு வருகிறது.
ஆறு மாத காலத்தில், முழுமையாக மருத்துவமனையாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது.
அண்ணாசாலையில் உள்ள, தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்குவதற்கு, பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்த நிலையில், அங்கு மீண்டும்
கட்டுமானப் பணிகள் துவங்கின.
பல்வேறு, ஒப்பந்த நிறுவனங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக, கீழ்தளத்திலிருந்து, ஒவ்வொரு தளத்தை இணைக்கும் விதமாக, சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன.
மண்துளையிடும் பணிக்காக, நான்கு துளையிடும் இயந்திரங்கள், இன்று கொண்டு வரப்படுகின்றன.
மருத்துவமனையாக்கும் பணிகளின் முதல்வேலையாக, மூன்று, நான்கு
தளங்களில் உள்ள அறைகளை, மருத்துவ வார்டாக மாற்றும் பணிகள், துவங்கி உள்ளன.
கட்டடத்தை இடிக்காமல், எவ்வாறு மருத்துவ வார்டாக மாற்றுவது என்பது குறித்து, பொதுப்பணித் துறை பொறியாளர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், ஆலோசித்து வருகின்றனர்.
இப்பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள், கூறுகையில், "இன்னும், ஆறு மாதத்திற்குள், அனைத்து கட்டுமானப் பணிகளையும் முடித்து விடும். அதன் பின், முழுமை பெற்ற, பல்நோக்கு மருத்துவமனையாக மாறும். இதற்காக, கூடுதல் பணியாளர்கள்
ஈடுபடுத்தப்படுவர்' என்றனர்.