புதுச்சேரி:திட்டங்களை நிறைவேற்றவேண்டுமானால் ஒரே தீர்வு மாநில அந்தஸ்து பெறுவது தான் என அமைச்சர் ராஜவேலு பேசினார்.
என். ஆர்.காங்., மாநாட்டில் அமைச்சர் ராஜவேலு பேசியதாவது:
புதுச்சேரி மக்களின் ஏகோபித்த ஆதரவால் மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ரங்கசாமி. மாநில மக்களின் வளர்ச்சி, வறுமையைப் போக்கவும் பல திட்டங்களைத் தந்தவர். மக்களுக்கு அதிகளவில் மானிய தொகையை தந்தவர் நம் முதல்வர் ரங்கசாமி. இந்திய வரலாற்றிலேயே கட்சி ஆரம்பித்து இரண்டே மாதத்தில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர் முதல்வர் ரங்கசாமி. அவரது அமைச்சரவையில் நானும் ஒரு அமைச்சர் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளி என பலருக்கும் வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்தோம். நிதித்துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு மாநில அந்தஸ்து பெறுவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.