புதுச்சேரி:உலக மகளிர்
தினத்தை முன்னிட்டு, பெண் வழக்கறிஞர்களுக்கான கோலப்போட்டி நேற்று
நடந்தது.கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த போட்டியில், ஏராளமான பெண்
வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, கோலம் போட்டனர். முதன்மை சார்பு நீதிமன்ற
நீதிபதி லீலாவதி, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ்
சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.போட்டியில், பெண் வழக்கறிஞர்கள் மரி
அன்னா தயாவதி, பெரியநாயகி, லாவண்யா, ஜெயமாரி முத்து அணியினரும், தனலட்சுமி,
வெண்ணிலா, தமிழ்ச்செல்வி, கிருத்திகாதேவி அணியினரும் முதல் இடத்தை
பிடித்தனர். லூர்து, விஜயபானு, வெண்ணிலா, ஆனந்தி அணியினர்
இரண்டாமிடத்தையும், அலெக்சாமேரி, பானுமதி, பஷிராகனி, செண்பக உமாபாரதி
அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர்.நடுவர்களுக்கு நினைவு பரிசு
வழங்கப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மகளிர் தின
விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள்
சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் ஷாகிதாபர்வீன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.