Advertisement
தினமலர் முதல் பக்கம் » மதுரை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் உடல் அடக்கம் அரசு சார்பில் மரியாதை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2013,01:27 IST

பேரையூர்:ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர் பெருமாளின் உடல், சொந்த ஊரான மதுரை தும்மநாயக்கன்பட்டியில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்த பெருமாளின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் 20 வீரர்கள், மதுரை இடையப்பட்டியில் உள்ள முகாமிற்கு, அவரது உடலை கொண்டு வந்தனர். அங்கு மரியாதை செலுத்தப்பட்டு, தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, பாலகிருஷ்ணன் எஸ்.பி., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த, 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை, பெருமாளின் தந்தை லிங்கத்திடம், கலெக்டர் வழங்கினார். தமிழக போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., சார்பில் 88 குண்டுகள் முழங்க, உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ.,க்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், தாசில்தார்கள் சவுந்திரராஜன், சத்தியசீலன் பங்கேற்றனர். பெருமாள் சுட்டு கொல்லப்பட்டது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
முரளி D - நியூDelhi,இந்தியா
16-மார்-201318:28:21 IST Report Abuse
முரளி D வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர் பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடுமை செயல்கள் தவிர்க்கபட வேண்டும் முரளி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.