புலி குட்டிகளுக்குபெயர் சூட்டினார் முதல்வர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மார்
2013
03:21

சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று பார்வையிட்டு, ஏழு புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டியதோடு, யானை, நீர் யானைகளை பார்வையிட்டார்.சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, 602 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 45 வகை பாலூட்டிகள், 70 வகை பறவையினங்கள், 29 வகை ஊர்வனங்கள் என, மொத்தம், 144 வகை உயிரினங்களை சேர்ந்த, 1,398 விலங்குகள் பராமரிக்கப் படுகின்றன.அழியும் நிலையில் உள்ள விலங்குகளை, இனவிருத்தி செய்யும் மையமாகவும் வண்டலூர் பூங்கா திகழ்கிறது.வண்டலூர் உயிரியல் பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை பார்வையிட்டார். வெள்ளைப்புலி கூண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர், அருகே சிறிய கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த, ஏழு புலி குட்டிகளை பார்வையிட்டார்.பின், ஒவ்வொரு புலி குட்டியையும், கூண்டில் இருந்து திறந்துவிடும் போது, அவற்றிற்கு பெயர் சூட்டினார்.வெள்ளைப் புலி குட்டிகளுக்கு, ஆர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், கலப்பின சேர்க்கை மூலம் பிறந்த புலி குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என, முதல்வர் பெயர் சூட்டினார்.பின், புலி குட்டிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, அவை விளையாடியதையும் சிறிது நேரம் கண்டு ரசித்தார். இதைதொடர்ந்து, யானை, நீர் யானைகளை முதல்வர் பார்வையிட்டார். மேலும், வனத் துறை சார்பில், பல்வேறு இடங்களில், 21 கோடியே, 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டியதோடு, 1 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங் களையும், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், வனத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshminarayanan Ha - chennai,இந்தியா
16-மார்-201308:50:36 IST Report Abuse
Lakshminarayanan Ha puli kuttikaluku enna oru pakkiyam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.