சென்னை:ஐகோர்ட்டில், 150வது நினைவு வளைவை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று திறந்து வைத்தனர்.ஐகோர்ட் துவங்கி, 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அங்கு நினைவுத் தூண் அமைக்கப்படும் என, கடந்தாண்டு முதல்வர் அறிவித்தார். இந்நினைவுத் தூண் திறப்பு விழா, ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், இக்பால், இப்ராகிம் கலிபுல்லாகான், ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் ஆகியோர், 150வது நினைவு வளைவைத் திறந்து வைத்தனர்.அதேபோல், ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோகர் நினைவுத் தூணையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திறந்து வைத்தனர்.விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கலந்து கொண்டனர்.