மதுரை:மதுரையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யமுடியாமல் காட்சி பொருட்களாக மாறியுள்ளன.தமிழகத்தில் தொழில்நுட்ப துறையில் மென் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கவும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. 2008ம் ஆண்டு ரூ.23 கோடியில், மதுரை இலந்தைகுளத்தில் அமைக்கப்பட்ட பூங்கா பணிகள் தற்போது நிறைவுற்றும், வாடகை, உலகளவிலான பொருளாதார நெருக்கடி போன்ற சில காரணங்களால், ஐ.டி. நிறுவனங்கள் இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. "ஹனிவெல்' மற்றும் "ஷெல்லா' நிறுவனங்கள் மட்டுமே விரைவில் வரஉள்ளன. ஆனால், வடபழஞ்சியில் உள்ள பூங்காவில் 10 சதவீத பணிகள்கூட இன்னும் முடியவில்லை.சிறிய நிறுவனங்களும் இதற்குள் நுழையும் வகையில், நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இங்கு நிறுவனங்கள் துவங்க வேண்டும் என்றால் ஒன்று நிலத்தை (99 ஆண்டுக்கு) குத்தகை எடுத்து புதிதாக கட்டடம் கட்டிக்கொள்ளலாம் அல்லது ஒரு சதுர அடிக்கு ரூ.28 வாடகை என்ற அடிப்படையில் கட்டப்பட்ட பகுதியில், நிறுவனத்தை துவங்கலாம். தற்போது வாடகை ரூ.20ஆக (வாடகை ரூ.15, பராமரிப்பு ரூ.5) குறைக்கப்பட்டுள்ளது. எச்.சி.எல்., இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ., போன்ற முன்னணி நிறுவனங்கள் தற்போது வரை ஆர்வம் காட்டவில்லை.இது குறித்து சிலரது கருத்துக்கள்... கதிர்காமன் (தலைவர், சி.ஐ.ஐ.,): வாடகை குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் சில ஐ.டி., நிறுவனங்கள், இலந்தைகுளம் பூங்காவில் வர வாய்ப்புள்ளன. பூங்காங்கள் அறிவிக்கப்பட்டபோது தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சி அபரிதமாக இருந்தது. தற்போது அதன் வேகம் குறைந்துள்ளது. மீண்டும் அந்த நிலையை எட்டும் வாய்ப்புள்ளது. சிறப்பு பொருளாதார மண்டல விதிமுறைப்படி, இப்பூங்காக்களில் ஏற்றுமதி வருவாய் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. உள்நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு முயற்சி மேற்கொண்டு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். சிவராஜா (தலைவர், தென் மாவட்ட மென்பொருள் முன்னேற்ற சங்கம்): தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "இன்குபேஷன்' முறை (ஒரு நிறுவனத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து மாதம் ரூ.4500 வாடகை வசூலிப்பது) வரவேற்கத்தக்கது. ஒரு சதுர அடிக்கான வாடகை ரூ.15 ஆக குறைக்க வேண்டும். ஏற்றுமதி வருவாய் 51 சதவீதம் உள்ள நிறுவனங்களே இப்பூங்காவிற்குள் நுழைய முடியும் என்ற நிபந்தனையை மாற்றி, உள்நாட்டு நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். பூங்கா அமைந்துள்ள பகுதியில் நிலத்தின் "மார்க்கெட்' விலைக்கு ஏற்ப வாடகை நிர்ணயிக்க
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.