அரசு இடங்களை ஆக்கிரமிப்பது அதிகரிப்பு: அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

25 மார்
2013
09:57
பதிவு செய்த நாள்
மார் 25,2013 02:15

கடலூர்:கடலூர் மஞ்சக்குப்பத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை நள்ளிரவில் செம்மண் நிரப்பி ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் நகரில் சாலையோரப்பகுதிகள், அரசுக்கு சொந்தமான புறம்போக்குகள், கோவில் நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது.
நகரப்பகுதியில் மனை விலை "கிடுகிடு' வென உயர்ந்து வருவதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு பட்டா பெற்று விற்பனை செய்து பல லட்சம் பணம் பார்க்கும் கும்பல் பெருகி வருகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அகற்றுவதற்கு அதிகரிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பல ஆண்டுகள் அனுபவ பாத்தியத்தை வைத்து அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வது வழக்கமாகிவிட்ட ஒன்றாகி விட்டது. குறிப்பாக கடலூரில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
உதாரணமாக, கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான 2.15 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவில் குளம் உள்ளது. சண்முகம் பிள்ளைத்தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, சின்னப்பன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மழை நீர் இக்குளத்தில்தான் சென்று வடிய வேண்டும்.
ஆனால் கோடை காலத்தில் பல சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் இக்குளத்தில் தான் சேகரமாகிறது. இந்த கழிவு நீரை பெண்ணையாற்றிற்கு திருப்பி அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இக்குளத்திற்கு அருகில் உள்ள பகுதி மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமானதாகும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இக்குளத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிக்கு சொந்தமான பகுதியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செம்மண் கொட்டி ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்காரணமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியோடு அரைகுறையாக நிற்கிறது.
கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டதால் அதற்கு அருகில் இருபுறமும் உள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வேகமாக ஆக்கிரமிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இதேப்போல ஜவான்ஸ்பவன் சாலை, முதுநகர் சாலை உட்பட பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
வறட்சிக்காரணமாக பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வற்றி வரும் தமிழகத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கால கட்டத்தில், இருக்கின்ற நீர்நிலைகளை தக்க வைத்துக்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் ஆக்கிரமிப்பாளர்கள் சுறுசுறுப்படைந்துள்
ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - chennai,இந்தியா
25-மார்-201305:52:17 IST Report Abuse
karthi அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று இருத்தல் சாதாரண மக்கள் எமாரவேண்டும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்ச பணம் கொடுத்தல் உடன் பட்ட கிடைக்கும் சென்னைல் உள்ள எரிகல் எல்லாம் அப்டித்தான் பட்டா கிடைத்தது
Rate this:
Share this comment
A.G. Murali - Chennai,இந்தியா
25-மார்-201314:09:53 IST Report Abuse
A.G. Muraliஇதே நிலைமை தான் சிதலபக்கம் ஏறி மேடவாக்கம் சென்னை அருகில்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.