Advertisement
நாராயணசாமி-ரங்கசாமி "ஈகோ': பா.ஜ., செயற்குழுவில் கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
02:24

புதுச்சேரி:புதுச்சேரி மாநில பா.ஜ., செயற்குழு கூட்டம், கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.
மாநில பா.ஜ., தலைவர் விஸ்வேஸ்வரன் தலைமை தாங்கினார். தேசிய இணை அமைப்பு பொதுச் செயலாளர் சத்தீஷ், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜீலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் கேசவலு, தேசியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜசேகர், நிர்வாகிகள் செல்வம், தங்கவிக்ரமன், ஜெயந்திமாலா, அருள்முருகன், சந்திரசேகர், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செயற்குழுவில், "என்.ஆர். காங்., அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும், கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், 30க்கும் மேற்பட்ட வாரியத் தலைவர்களை நியமித்துள்ளதால், தேவையற்ற நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமியும், முதல்வர் ரங்கசாமியும் தங்களுக்குள்ள ஈகோவை ஒதுக்கிவைத்து, புதுச்சேரி மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இளைஞரணி முன்னாள் தலைவர் சிவானந்தம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஊர்வலமாக கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு வந்தனர். மேடையில் இருந்த நிர்வாகிகளிடம், கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி தராமல், புதிதாக வந்தவர்களுக்கு பதவி தருவதாகக் கூறி பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.