E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கல்வித்துறை இணை இயக்குனர் அதிரடி...உத்தரவு:தேர்வுக்காக அமைச்úப் பணியாளர்கள் மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மார்
2013
01:38

கடலூர்:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு, பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 236 பேர், தனித் தேர்வர்கள் 4,580 பேர் என மொத்தம் 42 ஆயிரத்து 816 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

கடலூர் கல்வி மாவட்டத்தில் 2,110 தனித்தேர்வர்கள் உட்பட 29 ஆயிரத்து 860 பேருக்கு 64 தேர்வு மையங்களும், விருத்தாலம் கல்வி மாவட்டத்தில் 2,470 தனித்தேர்வர்கள் உட்பட 12 ஆயிரத்து 956 தேர்வர்களுக்காக 34 மையங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 98 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 180 ஆசிரியர்களைக் கொண்டு 60 பறக்கும் படையும், மேலும், சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்கள், தேர்வுத்துறை துணை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 3,430 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பத்தம் வகுப்பு பொதுத் தேர்வு பணியை சிறப்பாக செய்து முடிக்கும் பொருட்டு, தேர்வு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கடலூர், செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.கல்வித்துறை இணை இயக்குனர் (அனைவருக்கும் கல்வி திட்டம்) சசிகலா தலைமை தாங்கினார். தேர்வு துறை துணை இயக்குனர் ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கடலூர் சுப்ரமணி, விருத்தாசலம் வடிவேல், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் நிர்மலா முன்னிலை வகித்தனர்.முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், எவ்வித பிரச்னைக்கும் இடம் தராமல் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். வினாத்தாள்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். வினாத்தாள் மையங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலர்கள் மூலம் காலை 9:00 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு சென்றடைய வேண்டும்.பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். அதேப்போன்று மெட்ரிக் பள்ளிகளின் முதன்மைக் கண்காணிப்பாளர்களை, அரசு பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளி தேர்வு மையங்களுக்கு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கவும், பள்ளிகளில் உள்ள "ஜெராக்ஸ்' இயந்திரங்களை பூட்டி "சீல்' வைக்கவும் உத்தரவிட்டார்.

காலை 9:45 மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்க வேண்டும். அதன் முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேர்வறை கண்காணிப்பாளர் கையெழுத்திட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். சரியாக 10:00 மணிக்கு வினாத்தாள் வழங்க வேண்டும். அதனை மாணவர்கள் படித்துப் பார்க்க 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனால், வினாத்தாள் வழங்கியதும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. 10:15 மணிக்கு "பெல்' அடித்த பிறகே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

அதேப்போன்று பகல் 12:45 மணிக்கு இறுதி "பெல்' அடித்ததும் மாணவர்களிடம் இருந்து விடைத்தாளை வாங்கி விட வேண்டும். தேர்வின் போது எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிப்பாளர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என இணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், முதல் நாளே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்குச் சென்று முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஆஜராகி, எந்தெந்த தேர்வுகளுக்கு பணிக்கு வர வேண்டும் என்பதை அறிந்து கொண்டு, அதன்படி காலை 9:00 மணிக்குள் பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.